எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் லுக் போஸ்டரை ‘டான்’ படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், டாக்டர் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Wishing a very happy birthday to one of the most powerful performers of our time @iam_SJSuryah sir. Have a fantastic year ahead 💐😇#HBDSJSuryah #DON #Boominathan pic.twitter.com/gdWpQNGqfb
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 20, 2021
லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் லுக் போஸ்டரை டான் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது .