மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ், மகேஷ் பாபு எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Here we go!! #SVPBlasterhttps://t.co/YOvkHluTXt@KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @MythriOfficial @GMBents @14ReelsPlus #sarkaruVaariPaata
— Mahesh Babu (@urstrulyMahesh) August 8, 2021
மேலும் ஆகஸ்டு 9-ஆம் தேதி (இன்று) மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் செம மாஸான டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படம் வருகிற 2022 ஜனவரி 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.