சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது.
நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் #VaadiVaasalTitleLook @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/R6HXjYxvL2
— Kalaippuli S Thanu (@theVcreations) July 16, 2021
மேலும் இந்த படத்தில் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது . இந்நிலையில் வாடிவாசல் படத்தின் அட்டகாசமான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது .