நடிகர் அஜித் லேட்டஸ்டாக பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
https://twitter.com/ValimaiFilmPage/status/1417892022728364038
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் தல அஜித் பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் பைக் ரைடிங், ரேசிங், பைக் ஸ்டண்ட் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.