ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது .
பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது.
“#RoarOfRRR” OST Live Now🔥🌊
Rap Singer – @rblaaze
Rap Lyrics – @rblaaze, #AdityaIyengar
Programming – @achurajamani, #JeevanBabuAn @mmkeeravaani Musical
🎶 on @TSeries @LahariMusic @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 pic.twitter.com/ftJtYv77yP
— LahaRRRi Music (@LahariMusic) July 28, 2021
சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் வருகிற ஆகஸ்டு 1-ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நட்பு என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ராப் பாடகர் Blaze இந்த பாடலை பாடியுள்ளார். தற்போது இந்த அட்டகாசமான தீம் மியூசிக் இணையத்தில் வைரலாகி வருகிறது.