வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் செம ஸ்மார்ட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.