இன்றைய காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளே கிடையாது. நிறைய வீடுகளில் பிரிட்ஜ் இருந்தால் வெளிவரும் துர்நாற்றம் பெரும் தொந்தரவாக இருக்கும். இதை கிளிக் செய்யவும் கஷ்டம். இதை எப்படி இயற்கையாகவே சில பொருட்களை வைத்து கிளீன் செய்வது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
சமையலறையில் நம் வசதிக்காக பல பொருள்கள் வந்துவிட்டது. அதில் ஒன்று பிரிட்ஜ். பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இப்போது எல்லாம் பெண்கள் அடிக்கடி சமைக்க வேண்டாம், அடிக்கடி காய்கறி மார்க்கெட் செல்ல வேண்டாம், அடிக்கடி பால் பாக்கெட் வாங்க கடைக்கு செல்ல வேண்டாம். எல்லாவற்றையும் மொத்தமாக வாங்கி அடுக்கி விடுகிறோம். அப்படியே நாம் அதிக அளவு பொருட்களை வைத்திருக்கும்போது ஃப்ரிட்ஜில் ஒரு வகையான துர்நாற்றம் வீசும். அவற்றை போக்குவதற்கு சில டிப்ஸ்களை பற்றி இதில் பார்ப்போம்.
எலுமிச்சை பழத்தை பயன்படுத்திவிட்டு அதன் தோலை தூக்கி எரியாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி தட்டில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நாற்றம் வரத்து.
பேக்கிங் சோடா ஒரு வகையான மேஜிக் பவுடர். இது எந்த மாதிரியான கறையையும் நீக்கிவிடும். இதை வைத்து பிரிட்ஜை சுத்தம் செய்யலாம். ஒரு கப் பேக்கிங் சோடாவை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியேறும் நீரை சேமிக்கும் கப்பில் போட்டு வைத்தால் துர்நாற்றம் போய்விடும்.
கருவேப்பிலை, கீரைகள் மற்றும் கொத்தமல்லி தழைகளை அப்படியே வைக்காதீர்கள். சீக்கிரமாக அழுகி வாசனையை ஏற்படுத்தும். இதனை ஒரு டப்பாக்களில் போட்டு பயன்படுத்தினால் வாசனை வராது.
இஞ்சியை கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் மண்ணோடு அப்படியே பிரிட்ஜில் வைக்காமல் அதை நன்றாக கழுவி உலரவைத்து பின்னர் டப்பாக்களில் போட்டு வையுங்கள்.
ஒவ்வொரு வாரமும் பிரிட்ஜை சுத்தம் செய்யுங்கள். காய்கறிகள் அழுகி இருந்தால் அவற்றை தூக்கி எறிந்து விடுங்கள்.
காபி சிறந்த நறுமணத்தை தரக்கூடியது. எனவே ப்ரிட்ஜில் துர்நாற்றத்தை நீக்க நீங்கள் காபி பொடியை பயன்படுத்தலாம்.
பூ போன்ற வாசனையான பொருட்களை பிரிட்ஜில் வைக்கும்போது மூடி போட்டு நன்றாக மூடி வைத்தால் வாசனை வெளியே வராது.
காய்கறிகளை அதற்குரிய கூடையில் தனியாக போட்டு வைக்க வேண்டும்.
வாழைப்பழத்தை நீண்ட நாட்களுக்கு பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைப்பதால் ஒரு வித வாடை வரும்.
நீங்கள் வெளியூருக்குச் செல்லும்போது பிரிட்ஜை கிளீன் செய்வதற்கு சோம்பேறித்தனப்பட்டு அப்படியே காய்கறி, பழங்கள், உணவுகளை விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். இரண்டு நாட்கள்தான் கெடாமல் இருக்கும். அதன் பிறகு அனைத்தும் கெட்டுவிடும். நீங்கள் வெளியூருக்கு சென்று மறுபடியும் வீடு திரும்பும் பொழுது அந்த பொருட்கள் அனைத்திலிருந்தும் ஒருவித நாற்றம் வெளியேறும். இதுவே உங்கள் ஃப்ரிட்ஜின் நாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்றும் கூறலாம். எந்தவொரு பொருட்களை பிரிட்ஜில் வைத்தாலும் நன்றாக மூடி வைத்தால் அது கெட்டுப்போனாலும் வாசனை வெளியே வராது.