நடிகை சாய்ஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.
நடிகை சாயிஷா தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பிறகு ஷிவாய் திரைப்படத்தின் வாயிலாக இந்தியில் அறிமுகமானார். தமிழ் சினிமா உலகில் இவர் ஜெயம் ரவி நடித்த வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, டெடி, காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடிகர் ஆர்யாவை 2019 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற வருடம் இத்தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இடையில் திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சாயிஷா தற்போது மீண்டும் நடிக்க தயாராகி வருகின்றார். குழந்தை பிறந்தவுடன் சாயிஷா பெரும்பாலும் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வருகின்றார். வொர்க் அவுட் செய்யும் போது எடுக்கும் வீடியோக்களையும் தனது புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது பிங்க் நிற குட்டி உடை அணிந்தவாறு எடுக்கப்பட்டிருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கியூட், அழகாக இருக்கிறீர்கள் என ஃபர்ஸ்ட் கமெண்டுகளை கூறிவருகின்றனர். இப்புகைப்படமானது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.