சமூக வலைதளமான டுவிட்டரில் BornAkang என்பவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஆணும் பெண்ணும் லிப்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணிடம் லிப்ட்டில் இருந்தால் ஆண் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். உடனே அந்தப் பெண் பயப்படாமல் அந்த நபரின் கன்னத்தில் அடிக்கிறார். அதோடு அந்த நபரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்தார். உடனே அந்த நபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார்.
பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த அந்த நபருக்கு தற்போது வாங்கிய அடி வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும். இந்நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருவதோடு பெண்கள் அனைவரும் இப்படித்தான் துணிச்சலோடும் தைரியத்தோடும் இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
https://twitter.com/BornAKang/status/1607590068570542080?s=20&t=G6ZQ2wg9VAcxhErxjCK9Qw