இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பு திருமண ஜோடிகள் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்துவது வழக்கமாகிவிட்டது. திருமண ஜோடிகள் இவ்வாறான போட்டோ சூட் எடுக்க விரும்புகின்றனர். அவ்வகையில் யுனான் மாகாணத்தை சேர்ந்த ரூவான் என்ற இளநருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே அங்குள்ள ஜெட் டிராகன் ஸ்னோ என்ற மலைப்பகுதியில் ஃப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்துவதற்காக சென்று உள்ளனர்.
அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் போட்டோ சூட் நடத்தப்பட்டுள்ளது. அச்சமயத்தில் திடீரென மின்னல் மணமகனை தாக்கியது.அதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வானிலை மோசமாக இருப்பதால் போட்டோ சூட் எதுவும் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தி இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக சுற்றுலா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.