Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ப்ளாக் டீயை இப்படி யூஸ் பண்ணுங்க… வெள்ளை முடி எல்லாம் கருப்பாகிவிடும்… ட்ரை பண்ணுங்க..!!

நம்மில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது இளம்வயதிலேயே வரும் வெள்ளைமுடி. ஒரு முடி வெள்ளையாக  இருந்தால் கூட அது மிகவும் அசிங்கமாக தெரியும். அந்த வெள்ளை முடிக்கு தீர்வு அளிக்க பிளாக் டீ உதவும். எவ்வாறு என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

இளநரையை போக்க பல இயற்கை மருத்துவ முறைகளில் சிறந்தது கருப்பு டீ. கருமையான கூந்தலில் தோன்றும் வெள்ளை முடி மனதளவில் மிகவும் பாதிக்கும். இதை போக ப்ளாக் டீ உதவுகிறது.

தேவையான பொருள்

ஒன்று

தண்ணீர்- இரண்டு கப்

டீ பேக் -2

காப்பி தூள்-2 டேபிள்ஸ்பூன் உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். பிறகு டீ பேக் சேர்த்து விடவும், அதனை  இறக்கி ஆறவைத்து உச்சந் தலை முதல் ஸ்கால்ப் வரை நன்றாகத் தடவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நரை முடி பிரச்சனை தீரும்.

இரண்டு 

ப்ளாக் டீ தேயிலை – 3 டீஸ்பூன்

கல் உப்பு – கால் டீஸ்பூன்

இரண்டு கப் நீரை சேர்த்து அதில் தேயிலை போட்டு கொதிக்க வைத்து அதில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து இலைகள் நன்றாக நீரில் கொதிக்கவைத்து, பின்னர் ஆறவைத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும். தலைக்கு குளிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு இருந்தே இதனை கூந்தலில்  ஸ்பிரே செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வெள்ளை முடி பிரச்சனை விரைவில் குணமாகும்.

மூன்று

துளசி இலைகள் – 10

தேயிலை – 3 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – 5 துளிகள்

தண்ணீரில் துளசி இலைகள் சேர்த்து நன்றாக வேகவிடவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து ஆற விட்டு அதனை கூந்தலில் தடவி வந்தால் கூந்தல் நல்ல மாற்றத்தை தரும்.

நான்கு

ரோஸ்மேரி இலைகள் – 2

கற்பூரவல்லி இலைகள் -5

கருப்பு தேயிலை பேக் – 5 ( கூந்தலின் அளவுக்கேற்ப)

இலைகளை நறுக்கி இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதில் கருப்பு தேயிலை பேக் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பின்னர் இதனை இறக்கி ஆறவிட்டு கூந்தல் முழுக்க தடவிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பிளாக் டீ தலைமுடிக்கு இயற்கை நிறத்தை மீட்டு எடுக்கும் தன்மை கொண்டது. இதனால் முடி கொட்டும் பிரச்சனையும் தீரும். நரைமுடி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இந்த ப்ளாக் டீ உதவுகிறது. இதனை நீங்களும் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

Categories

Tech |