பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன் கணவனை ஒரு குறிப்பிட்ட மதுபான விடுதிக்கு போக வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த 31 வயதான டயானா ரபாயில்லா டீ சில்வா ரோட்ரிகோஸ் தன் கணவரை மதுபான விடுதி ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை எச்சரித்துள்ளார். ஏனென்றால் அந்த மதுபான விடுதியில் பாலியல் தொழிலாளர்கள் அடிக்கடி வருவார்கள். அதனால் போக வேண்டாம் என்று அடிக்கடி எச்சரித்துள்ளார். ஆனால் எதையும் கேட்காமல் கணவன் மறுபடியும் அந்த மதுபான விடுதிக்கு சென்றதால் கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு அந்த மதுபான விடுதிக்கு டயானா சென்றுள்ளார்.
அந்த விடுதியில் மேசையை சுற்றி ஆண்களும் பெண்களுமாய் அமர்ந்திருந்தார்கள். அவருடைய கணவரும் ஒரு இளம்பெண்ணுக்கு அருகே உட்கார்ந்து இருந்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த டயானா உடனே கையிலுள்ள துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் தன் கணவருக்கு அருகே உட்கார்ந்திருந்த 26 வயதான படிஸ்டா பர்ரோஸ் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 24 வயதான இளைஞர் கையில் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து டயானாவை போலீசார் கைது செய்து கொலை மற்றும் காயப்படுத்துதல் குற்றத்திற்காக விசாரித்து வருகின்றனர் .எனினும் இது திட்டமிட்ட கொலை இல்லை ஆத்திரத்தால் ஏற்பட்ட செயல் தான் என்று போலீசார் கூறியுள்ளனர்.