விலங்குகளின் வீடியோகளுக்கு மட்டும் இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலுள்ள பிணைப்பையும் நட்பையும் வெளிக்காட்டும் பல வீடியோக்கள் சமூகஊடகங்களில் பகிரப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் பிற உயிர்கள் மீது பரிவுகொண்ட நாய் ஒன்று, ஒரு நபர் மீனை வெட்டுவதைத் தடுக்கும் வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் நபர் ஒருவர் தன் கையில் கசாப்புக் கத்தியை வைத்திருப்பதை காண முடிகிறது.
The concept of empathy pic.twitter.com/bDrdCE5JOY
— Gabriele Corno (@Gabriele_Corno) October 12, 2022
இதையடுத்து அந்நபர் வாளியிலிருந்து ஒரு மீனை எடுத்து அதை வெட்ட தயாராவதை காண முடிகிறது. அதன்படி மீனை வெட்ட முயன்றபோது அவரது செல்ல நாய், தனது பாதத்தை அவர் கையின் மேல் வைத்துத் தடுத்து அவரிடமிருந்து கத்தியை எடுத்துச் செல்கிறது. இந்த வீடியோவானது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்நபர் மீனை வெட்டுவது நாய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அதன் முகத்தில் இருந்தே தெரிகிறது. இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாக பரவி, 13 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் பெரும்பாலான லைக்குகளையும் குவித்துள்ளது.