Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்…! அப்படி செய்யாதீங்க… மிகப்பெரிய ஆபத்து இருக்கு… பிரிட்டனுக்கு ஆய்வாளர் எச்சரிக்கை …!!

பிரிட்டனில் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்து வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்று ஆஸ்திரேலியா விஞ்ஞானி எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா தொற்றுநோய் நிபுணர், விக்டோரியாவின் மெல்போர்னில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியரான மைக்கேல் டூல் இவ்வாறு எச்சரித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளை பிரிட்டனின் ஹோட்டலில்  வெளியே செல்ல அனுமதிக்கும் விதி ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். முக கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, மக்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது போன்ற தடுப்பு செயல்கள் கொரோனா காற்றில் பரவுவதைத் தடுப்பது இல்லை.

பிரிட்டன் ஆஸ்திரேலியாவிடமிருந்து  கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஆஸ்திரேலியாவில் தடுப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை நிறுத்துவதில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தி இருந்தது. கொரோனா தடுப்பு பலப்படுத்தப்பட்டும் இருந்தது. பிரிட்டனில் ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனது அறையை விட்டு வெளியே வந்து உள்ளார். அதனால் அவரின் தொற்று காற்றின் மூலம் கீழே பயணித்த ஹோட்டல் ஊழியருக்கு பரவியது. இதனை எச்சரிக்கும் விதமாக மைக்கேல் டூல்  தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பயணிகள் பாதுகாவலர்களுடன் அறையை விட்டு வெளியேற வேண்டாம் அது மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |