கொரோனா கட்டுப்பாடுகளை ஸ்விட்சர்லாந்தில் தளர்த்த வேண்டாம் என்று நிபுணர்கள் பலர் மத்திய குழுவிற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஸ்விட்ஸர்லாந்தில் எதிர்வரும் வாரத்திற்கான கொரோனா கட்டுப்பாடுகள் பற்றி வரும் மத்தியகுழு அறிவிக்க இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா குறைந்து வரும் நேரத்தில் எதற்க்காக இந்த கடுமையான கட்டுப்பாடுகள் என்று மக்களிடம் பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைப்புகள் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு முழுமையாக தளர்த்தி அனைத்து கடைகளும் திறந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும் எனவும் வர்த்தக அமைப்பு கோரிக்கை வைத்து வருகின்றது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த இது சரியான நேரம் அல்ல. அதனால் சுவிட்சர்லாந்து அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என்றும் நிபுணர்கள் பலர் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏனென்றால் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மூன்றாம் கட்ட கொரோனா அலை பரவ நேரிடும் என்றும், அதனால் மறுபடியும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.