Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ் அரசியல் செய்யாதீங்க… ! அவரு பாஜகவே இல்லை…! மக்கள் அன்பை பெற்றவர்….!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இளையராஜா அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் கிடையாது. எட்டரைக் கோடி  தமிழக மக்களின் முழு அன்பையும் பெற்றவர். அதனால் என்னுடைய வேண்டுகோள்…. இதை தயவு செய்து யாரும் அரசியலாக்க வேண்டாம்.  நான் உறுதியாகச் சொல்வேன். நம்முடைய ஐயாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின்   உறுதியான வேண்டுகோள்.

அவருடைய மெட்டுக்கள்,  தமிழ் மக்களுக்கு ஆற்றி  இருக்கக்கூடிய சேவை என்றால் பாரத ரத்னா வாங்குவதற்கு….. நீங்க  ராஜ்யசபா எம்பி என்று சொல்வதை விட நான் ஒரு படி மேலேயே செல்கின்றேன். அவர் ராஜ சபா எம்பி என அடக்கி விடாதீர்கள்..

அவர் அதையெல்லாம் தாண்டிய மனிதர். இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கையை முழுமையாக ஒரு மனிதன் இன்று செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றான் என்றால் அது நம்முடைய பாரத பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் தான் என்று முன்னுரையில் பல கருத்துக்கள் சொல்லியிருக்கிறார் இளையராஜாவைப் பற்றி பல கருத்துக்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இடதுசாரிகள் என்று சொல்லக்கூடிய சில சினிமா இயக்குனர்கள்,  எழுத்தாளர்கள் அவர்களும் இளையராஜாவுக்கு எதிராக கருத்தை போட்டிருக்கிறார்கள். அதற்கு பாரதி ஜனதா கட்சி சார்பாக நாங்கள் கண்டனம் சொல்லி இருந்தோம். காரணம் இளையராஜா அவர்களுக்கு சொல்வதற்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அவர் பாரதிய ஜனதா கட்சி  கிடையாது.

அவருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. எப்படி தமிழ்நாட்டில் எல்லோருமே இசைஞானி இளையராஜாவை விரும்புகிறோமோ,  அதேபோல பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் அனைவருமே இசைஞானியை விரும்புகின்றோம். ஆனால் இந்த கட்டத்தில் அவர் சொல்லுகின்ற கருத்துக்கு நீங்கள் எதிர் கருத்து சொல்லுங்க. இரண்டு கருத்து சொல்லுங்க. ஆரோக்கியமான விவாதம் செய்யலாம்.ஆனால் தரக்குறைவாக விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? என தெரிவித்தார்.

Categories

Tech |