ரஷ்யா 39-ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள ஒரு சில நகரங்களும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கனரக ஆயுதங்கள் மற்றும் 100 மார்டர் வகை IFV வாகனங்கள் கேட்டு கடிதம் அனுப்பினார். ஆனால் 100 Marder IFV காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதற்கான உக்ரைனின் உதவி கோரிக்கைக்கு ஜெர்மனி மறுப்பு தெரிவித்துள்ளது.