வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்க உள்ள நிலையில் பிசிசிஐ ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இந்த பட்டியலில் ரூ.50 லட்சம் அடிப்படையில் விலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனவே இறுதிப் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம் பெற்றதற்காக ஸ்ரீசாந்த் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ரீசாந்த், “அனைவரையும் நேசிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. எப்போதும் அனைவருக்கும் நன்றியுடன் இருப்பேன். இறுதி ஏலத்தில் எனக்காகவும் தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள். ஓம் நமச்சிவாய” என்று டுவிட் பதிவு செய்துள்ளார்.