Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ்… என்னோட பொண்டாட்டிய விட்டுடுங்க… “லாட்ஜில் சிறைவைத்து கற்பழித்த கும்பல்”… சாமி கும்பிட பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை..!!!

பழனி பஸ் நிலையத்தில் கணவனுடன் சென்ற பெண்ணை கடத்தி வைத்து கற்பழித்த கும்பலை கண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தம்பதிகள் இருவரும் பழனியில் உள்ள சுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு கடந்த 19ஆம் தேதி பழனிக்கு வந்துள்ளனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வந்தனர். பேருந்து நிலையத்தில் அவர்கள் நடந்து சென்று இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில நபர்கள் அந்தப் பெண்ணை கடத்திச் செல்ல முயன்றனர். இதை பார்த்த அவரது கணவர் அவரை தடுக்க முயன்றபோது பெண்ணின் கணவரை தாக்கிவிட்டு பெண்ணை அருகில் உள்ள லாட்ஜுக்கு தூக்கி சென்றனர்.

பெண்ணின் கணவருக்கு லாட்ஜ்ஃக்குள் செல்ல முயன்றபோது அங்கிருந்தவர்கள் அவர் குடிபோதையில் வந்திருப்பதாக கூறி அடித்துத் துரத்தினர். பின்னர் அவரது மனைவியை கடத்திச் சென்று இரவு முழுவதும் லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலையில் அந்த லாட்ஜில் இருந்து தப்பித்து வந்துவிட்டார். வெளியே நின்ற கணவன் தன்னை தூக்கி சென்ற மூன்று நபர்கள் தன்னை கற்பழித்து விட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மனைவியை அழைத்து சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் குறித்து காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அந்தப் பெண்ணும் அவரது கணவரும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் நேற்று அந்த பெண்ணிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் தன்னை 3 பேர் கற்பழித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |