தமிழ் திரையுலகில் வெயில், அங்காடித்தெரு, காவியத் தலைவன் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் குறும் படம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது “தமிழ் திரையுலகம் ஒரே ஒரு விஷயத்தில்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. ஏனெனில் நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக ஸ்கிரீன்பிளே எழுத்தாளர்கள் இல்லாதது தான். தமிழ் திரையுலகில் சரிவு ஏற்படுகிறது எனில், அதற்கு இது தான் காரணம் ஆகும். மலையாள திரையுலகில் கதாசிரியர்களை தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்.
அங்கே கதாசிரியர்களிடம் கதையை முடிவுசெய்த பிறகுதான், மம்முட்டி, மோகன்லால் போன்றோரை தேடி செல்கின்றனர். அதுபோன்று இங்குள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கதாசிரியர்களை கொண்டாட வேண்டும். எப்போது சினிமாவுக்கான புரிதல் உடைய கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகளவு உருவாக்கப்படுகிறார்களோ, அப்போது வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றிபெறும். மேலும் ரசிகர்களால் கொண்டாடப்படும். நான் ஒரு தயாரிப்பாளராக கதாசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை தர தயாராக இருக்கிறேன். ஆகவே தயவுசெய்து எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் தமிழ் திரையுலகிற்கு வாருங்கள்” என்று அவர் கூறினார்.