ஆப்கானிஸ்தானில் நடப்பாண்டில் 97% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கடந்த 20 வருடங்களாக தலிபான்களுடன் சண்டையிட்டு வந்துள்ளதால் அந்நாடு மிகவும் வறுமையாக இருந்துள்ளது.
இதனையடுத்து கடந்த சில வருடங்களாக ஆட்சி மாற்றம், பொருளாதார இழப்பு, வறட்சி போன்ற பல காரணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் உணவு பஞ்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த வருடத்தில் மட்டுமே சுமார் 97% மக்கள் உணவு பஞ்சத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றுள்ளார்கள்.
இதற்கிடையே ஆப்கன் மக்கள் உணவிற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களது உடல் உறுப்புகளையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் பஞ்சத்தால் வாடி தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று ஐ.நாவின் உலக உணவு திட்டத் தலைவரான டேவிட் பீஸ்லி கூறியுள்ளார்.