Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்… தள்ளுபடி செய்யுங்க…. நான் அப்படி சொல்லவே இல்லை… சட்டத்தின் கதவை தட்டிய மன்சூர் அலிகான் ..!!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் பேச்சு அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நல பணிக்கு  எதிராக இருப்பதாக கூறி கோடம்பாக்கம் மண்டலம் மருத்துவ அலுவலர் பூபேஷ் புகார் அளித்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மன்சூரலிகான் மனு தாக்கல் செய்தார். கொரோனா தடுப்பூசி போடுமாறு  கட்டாயப்படுத்தக் கூடாது என்று மட்டுமே நான் கூறியதாகவும், தடுப்பூசி குறித்து எதுவும் தவறாக குறிப்பிடவில்லை என்றும் அந்த மனுவில் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை குறித்த தகவல்கள் முழுமையாக இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து தற்போது மன்சூரலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதைப்போன்று வடபழனி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் மன்சூர் அலிகான் தனியாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |