தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைத்தீஸ்வரி என்ற பிளஸ் 2 மாணவி பள்ளியின் விடுதி கழிப்பறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை பயன்படுத்தி உள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள முத்து கருப்பன் என்னும் பெயரில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு திடீரென பள்ளி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், ப்ளீஸ் ஆஞ்சநேயா நான் எப்படியாவது இன்று அல்லது நாளைக்குள் செத்துரனும், சாகும்போது யார் நினைப்பும் வரக்கூடாது”என்று குறிப்பிட்டுள்ளார். மாணவியின் மரணத்திற்கு இதுவரை எந்த காரணம் என்பது தெரியவில்லை.சமூக தெளிவாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.