Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ளீஸ்” நெஞ்சில் ஆட்டோகிராப் போடுங்க…. ராஷ்மிகாவை வற்புறுத்திய ரசிகர்…. வீடியோ வைரல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் தற்போதைய லேட்டஸ்ட் கிரஷ். இவர் கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கில் வெளியான கீதாகோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சாமி சாமி என்ற பாடலின் மூலம் ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.

See this Instagram video by @viralbhayani: https://www.instagram.com/reel/Ci991pZjlZp/?utm_source=ig_web_button_share_sheet

இவர் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர் ஒருவர் நெஞ்சில் ஆட்டோகிராப் போடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு ராஷ்மிகா மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் ரசிகர் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி நெஞ்சில் ரஷ்மிகா ஆட்டோகிராப் போட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |