பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சொந்த காரணத்தின் காரணமாக ஜிபி முத்து வெளியேறினார். இதையடுத்து முதல் வாரத்தில் சாந்தி வீட்டை விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெண்களிடையே சீண்டல்களில் ஈடுபட்ட அசல் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் செரினா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட வேண்டாம் என்று பிக்பாஸிடம் கேமரா முன் கெஞ்சியுள்ளார். நான் சில நேரங்களில் கோபப்பட்டு பேசிவிடுகிறேன். வெளியில் போகிறேன், வெளியில் போகிறேன் என்று அடிக்கடி சொல்லிவிடுகிறேன். இனி நான் அப்படி சொல்லமாட்டேன். இனி சரியாக இருப்பேன். இதை மட்டும் டிவியில் போடாதீங்க, ப்ளீஸ் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார்.