Categories
அரசியல்

ப்ளீஸ்..! புரிஞ்சுக்கோங்க… மத்திய அரசோடு ”சண்டை போடாதீங்க”.. எச்.ராஜா அட்வைஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா,  நான் சொல்கிறேன் தயவுசெய்து நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள், இதுவரை இவர்கள் செய்தது எல்லாமே பொய்யானது, போலியானது, பிரிவினைவாதத்தின் அடிப்படையிலே வந்தது, உண்மையின் அடிப்படையில் இல்லாதது என்கிறதை இப்போ நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் 470, 520, 600க்கு மேல உங்களோட  நீட் பற்றிய பிதற்றல்கள் பொய்யென்று மாணவச் செல்வங்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.

அதனால் எதிரியை தேடி தேடி போவதைவிட தமிழ்நாடு அரசாங்கம் இந்த மாதிரி ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் மாநில அரசு இனிமேலாவது இந்த சண்டைக்காரன் போக்கு மத்திய அரசு என்றால் சண்டை போட வேண்டும் அதற்கு இரண்டு பேர் டூப் போடுவாங்க வைகோ மாதிரி, திருமாவளவன் மாதிரி…

அவங்களுக்கு என்ன ஆச்சு மேலே வானம் கீழே பூமி ஆனால் திமுக அப்படி இல்ல. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதனால் மத்திய சர்க்காரோடு சண்டை போடுற போக்கு இல்லாமல் ஆக்க பூர்வமாக இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Categories

Tech |