இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, அரசு ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அதனையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி இன்றைய தினம் அவர்களை புனித ஜார்ஜ் கோட்டையில் அழைத்து பேசிய பொழுது அவர்கள் பக்கத்தில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
அவர்கள் தரப்பில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். அந்தக் கருத்து அவர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சங்கங்களுடன் பேசி அரசின் கருத்தை தெரிவிக்க சொல்லி இருக்கிறோம்.
எனவே அரசு உங்களை மதித்து புனித ஜார்ஜ் கோட்டையில் அழைத்துப் பேசிய பொழுது அதனடிப்படையில் நீங்களும் உங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு அரசு நிர்வாகம் சீராக செயல்படவும், அதேபோன்று பொதுமக்களுடைய ஊழியர் என்ற அடிப்படையிலும்,
நண்பர் என்ற அடிப்படையிலும், அதைப்போன்று பொதுமக்களுக்கு நல்ல சேவை ஆற்றுகின்ற ஒரு சூழ்நிலையில், பொதுமக்களை மதிக்கின்ற வகையில் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
உங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என்றும் சொன்னோம். அவர்கள் எல்லோரும் ஒரு நல்ல எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் சொன்ன கருத்துக்களை எல்லாம் கேட்டு வேலை நிறுத்தத்தை தற்போது வாபஸ் வாங்குவதாக அனைவரும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
பிரதான கோரிக்கைகளாக பென்ஷன் ஸ்கீம், அதேபோல சம்பள விகிதங்களை சரி செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதையெல்லாம் வந்து முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்ற கருத்து அவர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.