Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்… யாரும் வராதீங்க…. கையெடுத்து கும்பிட்ட போலீஸ்…. புதுவை எல்லையில் தீவிர கண்காணிப்பு …!!

புதுச்சேரியில் மக்கள் யாரும் அத்தியாவசியம் இன்றி தமிழக பகுதிக்கு சென்று வர வேண்டாம் என எல்லைகளில் போலீசார் கும்பிட்டு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தமிழகம் புதுச்சேரியில் கடந்த 10ஆம் நாள் முதல் நேற்று முன்தினம் காலை வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அத்தியாவசியமின்றி யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதை அடுத்து புதுச்சேரி தமிழக எல்லையான பகுதியான கோரிமேட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது வாகன ஓட்டிகளிடம் தமிழகத்துக்கு சென்று வர வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொண்டனர்.

Categories

Tech |