வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என ட்ரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மற்றும் மெலானியாடிரம்ப் தலைநகர் வாஷிங்டனில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய இறுதி உரையில் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்
அமெரிக்கா சுதந்திரம் மற்றும் வீரம் கொண்ட வீரர்களின் வரலாற்றை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போதிக்கும்மாறு அவர் கேட்டுக்கொண்டார். ஒரு குடும்பமாக இணைந்து எதிர்கால நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என மெலானியா டிரம்ப் அப்போது வலியுறுத்தினார்.