விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் திமுகவை சாடி விமர்சனம் செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கட்சி தொண்டர் இல்ல நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், கேப்டனையும், கட்சியையும் கைவிட்டு விடக் கூடாது என தொண்டர்களிடம் கேட்டுக் கொண்ட விஜயபிரபாகரன் எந்த கருப்புஆடு இருந்தாலும் மூளை சலவை செய்பவர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் நாம் வாங்குன வாக்கு ஒரு வாக்குகளே இல்லை. அது நம்ம எல்லாருக்குமே தெரியும். அது தேர்தலில் கடைசி நேரத்தில் சூழ்ச்சியால் வேறுவழியில்லாமல் கூட்டணி அமைத்து ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய காலம் ஆகிரும். தேர்தலை புறக்கணித்து போய் விடலாம் ஆனால் அப்புறம் என்ன ஆகும் தேர்தலை புறக்கணித்துவிட்டார்கள் என அது ஒரு செய்தி ஆகிவிடும்.
எதோ ஒரு தைரியமாக நிற்கிறார்கள். அவர் ஆசையை நிறைவேற்ற வேண்டும் அவர் பையன் மட்டுமல்ல ஒவ்வொரு தொண்டர்களின் கடமை அது தான். எல்லாரும் எம்.எல்.ஏ ஆகணும், மந்திரி ஆகணும், நகர செயலாளராக ஆக வேண்டும் என்பதற்காக அல்ல என் தலைவன் முதல்வர் ஆக வேண்டும் அதற்காக தான் நாம் வந்திருக்கிறோம் இதுக்கு.
பிழைப்பதற்காக இங்கு வராதீர்கள் உழைப்பதற்காக மட்டும் இந்த கட்சிக்கு வாங்க என்று நான் சொல்லிகொள்கிறேன். இன்று நாங்கள் குடும்பத்தோடு பிழைக்க வரல மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம் என தெரிவித்தார். குடும்பத்தோடு பிழைக்க என விஜய்பிரபாகரன் சொல்லியுள்ளது திமுகவை என திமுக நிர்வாகிகளை வேதனையை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.