சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ப்ளூடிக் சேவையில் தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதை தடுக்கும் விதமாக தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்து இருப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் ப்ளூ டிக் வழங்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசியின் மூலமாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரி பார்க்கப்பட்ட பின் ப்ளூ டிக் மீண்டும் உறுதி செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ட்விட்டர் நிறுவன மேலாளர் எஸ்தர் கிராபோர்டு ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக் வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பான சந்தேகங்களை பல பயனர்கள் எழுப்பியுள்ளனர். அதற்கு எஸ்தர் பதில்களை வெளியிட்டுள்ளார்.
Categories