Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ளூ சட்டை மாறனுக்கு செருப்பு மாலை அணிவித்த சிம்பு ரசிகாஸ்”….. எரியற தீயுல மேலும் தீ வைப்பு….!!!!!!

ப்ளூ சட்டை மாறனின் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து தீயிட்டு கொளுத்தி உள்ளார்கள் சிம்பு ரசிகர்கள்.

இயக்குனராகவும் பிரபல விமர்சகராகவும் வலம் வருகின்றார் ப்ளூ சட்டை மாறன். இவர் முன்னணி நடிகர்கள் முதல் வளரும் நடிகர்கள் வரை அனைவரையும் விளாசி வருகின்றார். அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதோடு உருவ கேலியும் செய்து வருகின்றார். இதனால் இவர் பல சர்ச்சையில் சிக்கி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் மோசமாக விமர்சனம் செய்ததோடு உருவ கேலியும் செய்துள்ளார்.

இதை அடுத்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டையை இறங்கி ஏதாவது செய்யலாமா என தோன்றுகிறது. இதற்கு முழு சட்டை மாறன், வீரபாகு நீ தான் தைரியமான ஆளாச்சே? என்ன செய்யப் போற எனக் கேட்டார். இதைத்தொடர்ந்து இணையத்தில் கௌதம் மேனனையும் சிம்புவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார். சிம்புவை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார். சிம்புவை ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள். மேலும் அவரது பேனரையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள். இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ப்ளூ சட்டை மாறன் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் சிம்பு ரசிகர்களை நான் பாராட்டுகின்றேன் என நக்கலடித்து இருக்கின்றார்.

Categories

Tech |