ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ≈660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு மாதந்தோறும் $8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்ற முடிவிலிருந்து அந்நிறுவனம் பின் வாங்கியதாக தெரிகிறது.
போலிக்கணக்குகள் வைத்திருப் போரும் பணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்க முன்வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. முன்னதாக official அக்கவுண்ட்டுகளுக்கு ‘official’ எனும் Tag ஐ ட்விட்டர் வழங்கத் தொடங்கிவிட்டது.