Categories
டெக்னாலஜி

ப்ளே ஸ்டோரில் 2,000 ‘லோன் ஆப்ஸ்’ நீக்கம்….. கூகுள் நிறுவனம் அதிரடி….!!!!

இந்தியா முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் போலி கடன் செயலிகள் மூலம் பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல், மன நிம்மதி இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் கூகுள் மூத்த இயக்குனர் சைகத் மித்ரா அளித்த பேட்டியில், ‘கூகுளின் விதிகளை மீறுதல், தவறான தகவல்களை வெளியிடுதல் போன்ற காரணங்களுக்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட லோன் ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளன.

லோன் ஆப்ஸ் பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், தற்போது அதனை கடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விதிகளை மேலும் கடுமையாக்குவது குறித்தும் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக நடத்துவதற்காக பல்வேறு மொழிகளில் விழிப்புணர்வு திட்டத்தையும் கூகுள் தொடங்கியுள்ளது’ என்றார்.

Categories

Tech |