மகத் நடிப்பில் உருவாகி வரும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் வில்லனாக நடிக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் நடிகர் மகத் மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, காதல் கண்டிஷன் அப்ளை, இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதில் பிரபு ராம் இயக்கத்தில் உருவாகி வரும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.