நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சரவணன் பணிபுரிந்து வருகிறார். இவர் மாவட்டம் முழுவதும் கனிம வளம் கடத்தல் சம்பவங்கள், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் சார்பில் காவலர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகள் சிக்கி வருகின்றன. மேலும் அதிக பராம் எற்றி செல்லு லாரிகளும் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் திமுகவை அதிர்ச்சி அடைய செய்யும் சம்பவம் ஒன்று அரங்கியுள்ளது.
அதாவது குவாரி மணல் கடத்தல் வழக்கில் நெல்லை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிருவியத்தின் மகன் தினகரன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட பழவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் உவரி செல்லும் சாலையில் விஸ்வநாதபுரம் ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டாரஸ் லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அந்த சோதனையின் போது, எந்தவித அரசு அனுமதியும், நடைச்சியீட்டும் இல்லாமல் தல ஐந்து யூனிட் கிரசர் மணல் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து லாரிகனை ஓட்டி வந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து லாரிகளையும் கைப்பற்றினார்.
அதன் பிறகு நடந்த விசாரணையில், இரண்டு லாரிகளும் நெல்லை ஆவரை குளத்தை சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்கு சொந்தமானது என்று ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பழவூர் காவல் நிலையத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், மூன்றாவது குற்றவாளியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானத்திரவியத்தின் மகன் தினகரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தினகரன் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நெல்லை கல்குவாரி விபத்தை தொடர்ந்து ஆட்சியரின் நடவடிக்கையால் கல்குவாரி அனைத்தும் மூடப்பட்டது. இதனயடுத்து குவாரிகளை திறக்கச் சொல்லி அமைச்சர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை திமுக எம்.பி. ஞானதிரவியம் நேரடியாக மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த விவகார பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது அவரது மகன் மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.