தகராறு செய்த மகனை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள செந்தண்ணீர்புரம் பகுதியில் அற்புதராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பு என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருமணமாகி தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அப்பு மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தந்தையான அற்புதராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அற்புதராஜ் போதையில் படுத்திருந்த அப்புவின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு துண்டால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார்.
மேலும் வீட்டில் இருந்த கத்தியால் தனது மகனின் கழுத்தில் சரமாரியாக குத்தியதால் சம்பவ இடத்திலேயே அப்பு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்புவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அற்புதராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.