Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகனின் தில்லுமுல்லு வேலை… தாய்க்கு தெரியவந்த உண்மை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வங்கியில் போலி ஆவணம் மூலம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமரேச புரத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வேளாங்கண்ணி  என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜாய்குட்டி என்ற ஒரு மகன் உள்ளார். இதனை அடுத்து வேளாங்கண்ணி தன்னுடைய வீட்டுப் பத்திரங்களை திருச்சி மாவட்டத்திலுள்ள ஈக்விடாஸ் மைக்ரோ நிதி வங்கியில் தற்போது மேலாளராக பணியாற்றி வரும் இளமுருகு என்பவரிடம் 2,70,000 ரூபாய்க்கு அடமானம் வைக்க விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் வேளாங்கண்ணியின் மகனான ஜாய்குட்டி, வங்கி மேலாளரான இளமுருகுவுடன் இணைந்து ஜாய்குட்டியின் பெயரில் வேளாங்கண்ணி பணத்தை டெபாசிட் செய்வது போன்ற போலி ஆவணங்களை தயாரித்து பணத்தை பெற்றுக்கொண்டார். இது தெரிந்ததும் வேளாங்கண்ணி திருச்சி கே.எம் – 2 நீதிமன்றதில் இந்த விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் கே.கே நகர் காவல்துறையினர் குற்றவாளியான வேளாங்கண்ணியின் மகன் ஜாய்குட்டி மற்றும் வங்கி மேலாளரான இளமுருகு ஆகியோரை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |