தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த பிரபுதேவாவிடம் ரசிகர்கள் மகனை ஹீரோவாக்கலாமே என தெரிவித்து வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகின் பிரபலமான பிரபு தேவா டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர். இவருக்கு முதல் திருமணம் மூலம் மூன்று மகன்கள் இருந்த நிலையில் மூத்த மகன் சென்ற 2008 ஆம் வருடம் புற்றுநோயால் உயிரிழந்து விட்டார். பிரபுதேவா மனைவியை பிரிந்தாலும் மகன்களுடன் தொடர்பில் தான் இருக்கின்றார்.
Missing u sir , from yesterday eve thinking about u pic.twitter.com/ywtw2KTllE
— Prabhudheva (@PDdancing) July 9, 2022
பின் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ஆனால் மகன்கள் மீது வைத்திருக்கும் பாசம் மட்டும் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த நடிகர் பாண்டுவை மிஸ் பண்ணுவதாக கூறி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் பிரபுதேவாவின் மகனை பார்த்தவர்கள் பிரபுதேவா மாதிரியே இருக்கின்றாரே என கூறுகின்றனர். மேலும் மகனை வைத்து படம் இயக்கலாமே எனவும் கூறியுள்ளனர்.