நடிகர் மகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் மகத் மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். மேலும் நடிகர் மகத் கடந்த ஆண்டு பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது .
World, meet ADHIYAMAN RAGHAVENDRA 🤩 the newest noisemaker of the house.
He is everything and more❤️
We can’t thank you enough for all the love 🤗
We both are extremely grateful and excited for this new chapter called parenthood. @meprachimishra 😘#AdhiyamanRaghavendra pic.twitter.com/Qpaycwch2R— Mahat Raghavendra (@MahatOfficial) June 19, 2021
இந்நிலையில் நடிகர் மகத் தனது மகனுக்கு ‘அதியமான் ராகவேந்திரா’ என பெயர் வைத்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.