தான் ஏழையாக இருந்தாலும் தனது மகன் மகளை இளவரசன், இளவரசியாக வளர்க்க வேண்டுமென நினைப்பது தந்தையின் குணம். மகாராஷ்டிராவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் தாதரே லோகர். இவரது மகனுக்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. மேலும் அந்த காரில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் நினைத்தார். இந்த ஆசையை லோகரின் மகன் தனது தந்தையிடம் கூறுகிறார். இந்நிலையில் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது மெக்கானிக் பார்வையில் கிக்கர் ஸ்டார்ட் சிஸ்டம் மூலம் தனது சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்து லோகர் ஒரு காரை உருவாக்குகிறார்.
இந்த காரில் பயணம் செய்வதற்காக லோகரின் மகன் அதில் ஆசையாக ஏறியுள்ளார். அப்போது லோக்கல் அத்தாரிட்டிஸ் இந்த கார் பாதுகாப்பற்றது என கூறி அதில் பயணிக்கக் கூடாது என தெரிவித்தனர். இதனால் தந்தை, மகன் இருவரும் மன உளைச்சலில் இருந்தனர். இந்த செய்தி வலைதளங்களில் வைரலானது. இதனை அறிந்த மஹிந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மகேந்திரா லோகரின் குடும்பத்தினருக்கு POLERO காரை பரிசாக அளித்தார். மேலும் லோகர் தயாரித்த காரை தனது நிறுவனத்தில் வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.