Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகனுக்கு சூடு வைத்த கொடூர தாய்” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

மகனுக்கு சூடு வைத்த தாயிடம்  அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள  ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  அந்த பெண்  சிறுவனின் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார்.

இதனை பார்த்து பொதுமக்கள் உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை மீட்டு  காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |