மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்த மூதாட்டி பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே வடகால் பகுதியில் 70 வயதான மூதாட்டி தன் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன் மகனுக்கு வயதான காலத்தில் இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்துள்ளார்.
மேலும் மகனுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணிய அவர் வடகால் பக்கத்தில் இருக்கும் தனியார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அதன்பின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.