ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகரில் ஆர்.டி.ஓ ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 மகன், மகள் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் பிறந்தநாள் என்றால் ரத்ததானம் செய்வார்கள். இந்நிலையில் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு பாஸ்கரன் இவருடைய மனைவி, மகள், மருமகன் மற்றும் மகன் என 5 பேரும் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதுவரை பாஸ்கரன் 23 ரத்ததானம் செய்துள்ளார்.
இதற்கிடையில் குடும்பத்தோடு 5 பேரும் சேர்ந்து மதுரையில் கண்தானம் செய்துள்ளனர். இதுகுறித்து பாஸ்கரன் கூறியதாவது உடல் உறுப்பு தானம் என்பது தானத்தில் சிறந்த தானம் ஆகும். இந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உடல் உறுப்புதானம் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் எங்களைப் போலவே அனைத்து மக்களும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.