அம்பத்தூர் அருகே மகனுக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரை சேர்ந்தவர் லதா. இவருக்கும் இவருடைய கணவர் பரத்வாஜ் என்பவருக்கும் சென்ற நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். இத்தம்பதியினருக்கு தவஜ் என்கிற 14 வயதுடைய மகன் இருக்கின்றான். தவஜ் மற்றும் லதா தனியாக வசித்து வந்தார்கள். தவஜ் அம்பத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை தவஜ் மயக்கத்தோடு இருந்ததால் வீட்டின் எதிரே வசிக்கும் நவநீதம் என்பவரை அழைத்து இருக்கின்றார். உள்ளே வந்த அவர் லதா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் மயக்க நிலையில் இருந்த தவஜை உறவினர்கள் உதவியுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள் ஆனால் சிகிச்சை பலனின்றி தவஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் பொருளாதார வசதியின்றி நெருக்கடையில் இருந்து வந்த லதா தற்கொலை முடிவு எடுத்து தனது மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.