மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி அருகே வீரானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வீரானந்தம் பக்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் ஜெயபாரதி ஸ்ரீஹரிக்கு விஷம் கொடுத்து கொன்ற பிறகு தானும் அதனை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தாய் மகன் இருவரின் உடல்களையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.