பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை சுஜிதா முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விளம்பரப் படங்களை இயக்கும் தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார் . இந்நிலையில் சுஜிதா தனது மகனுடன் ஒரே டிசைனில் இருக்கும் உடையை அணிந்து அட்டகாசமான போட்டோஷூட் நடத்தியுள்ளார் . மேலும் அவர் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.