வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை அடுத்துள்ள சிறப்பாறை கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அவர் தடுத்ததால் அந்த பெண்ணின் மகனை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் உடனடியாக கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற முத்தையாவை கைது செய்துள்ளனர். மேலும் பட்டப்பகலில் வீட்டில் மகனுடன் இருந்த பெண்ணிடம் வாலிபர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.