Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்….. காதல் கணவரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மறவன்குடியிருப்பு பகுதியில் சோனியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சோனியா ஜெயராஜ்(38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அபினாஷ், அபி நிஷாந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் சோனியா தனது இளைய மகனுடன் சுசீந்திரம். அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் அங்கு வந்த ஜெயராஜ் ஸ்கூட்டரை வழிமறித்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சோனியா மறுப்பு தெரிவித்ததால் ஜெயராஜ் அரிவாளை எடுத்து தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் ஜெயராஜை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சோனியாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ஜெயராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |