Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை அடித்து கொன்று…. சாக்கு மூட்டையில் கட்டி வந்த தம்பதியினர்…. மதுரையில் பெரும் பரபரப்பு…!!

தம்பதியினர் மகனை அடித்து கொன்றுவிட்டு வைகை ஆற்றங்கரையோரம் வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் வைகை ஆற்றின் தென்கரையில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு நேரத்தில் ஒரு முதியவரும், மூதாட்டியும் இணைந்து சைக்கிளின் பின்னால் ஒரு மூட்டையை கட்டி உருட்டி வந்தது பதிவாகியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆரப்பாளையம் பகுதியில் வசிக்கும் பழ வியாபாரியான முருகேசன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது சடலமாக மீட்கப்பட்ட நபர் தம்பதியினரின் மகனான மணிமாறன் என்பது தெரியவந்துள்ளது.

இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். மணிமாறனுக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிமாறனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிமாறன் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். இதனால் முருகேசன் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு மணிமாறனிடம் கூறியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த முருகேசன் அருகில் கிடந்த கட்டையால் மணிமாறனை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் மணிமாறனின் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி நள்ளிரவு நேரத்தில் ஆரப்பாளையம் வைகை ஆற்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின் மணிமாறனின் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு தம்பதியினர் அங்கிருந்து சென்றது தெரியவந்துள்ளது

Categories

Tech |